மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை 5,317 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 7,226 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,317 கன அடியாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க | எளிமையே டாடாவின் அடையாளம்!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியில் இருந்து வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,317 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 91.08 அடியில் இருந்து 90.28 அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 52.97 டிஎம்சியாக உள்ளது.

Related posts

ஆயுத பூஜை, விஜயதசமி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து

தினப்பலன்கள்!

அமெரிக்கா: ஃபுளோரிடாவை தாக்கிய மில்டன் புயல் – 10 பேர் பலி!