மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 19,090 கன அடியாக சற்று குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தனிந்ததன் காரணமாக வியாழக்கிழமை காலை வினாடிக்கு 19,495 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை(அக்.18) காலை வினாடிக்கு 19,090 கன அடியாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க |பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயில் இயக்கி மீண்டும் சோதனை

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும்,கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆணையின் நீர்மட்டம் 93.35 அடியிலிருந்து 94.65 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.30 அடி உயர்ந்துள்ளது.

நீர் இருப்பு 58.12 டிஎம்சியாக உள்ளது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!