மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,099 கனஅடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிய தொடங்கியது.
இதையும் படிக்க : இந்திரா காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.55 அடியில் இருந்து 108.22 அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,568 கன அடியிலிருந்து வினாடிக்கு 8099 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 75.90 டிஎம்சியாக உள்ளது.