மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,629 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று(செப். 15) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,217 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,629 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

சொல்லப் போனால்… டாப் விஐபிக்கள் சந்திப்பும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட சீசரின் மனைவியும்!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 111.75 அடியிலிருந்து 111. 19 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 80.11 டிஎம்சியாக உள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!