மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 4,938 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,445 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: கலைஞா் பூங்காவில் திடீரென நின்ற ஜீப்லைன்: காரணம் என்ன?

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 89.67 அடியிலிருந்து 89.26 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 51.81 டிஎம்சி யாக உள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!