மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாசன தேவை குறைந்தது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்குமேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து 300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,596 கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,531 கனஅடியாக குறைந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 89.92 அடியிலிருந்து 90.87 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 53.65 டிஎம்சியாக உள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது