மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 16,577 கன அடி!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 16,577 கன அடி!மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16, 577கன அடியாக அதிகரிப்பு.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16, 577கன அடியாக அதிகரிப்பு.

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் கபினி அணை நிரம்பியது. அணை நிரம்பிய நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் கபினி அணையின் பாதுகாப்பு கருதி கடந்த இரு நாள்களுக்கு முன்பு உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

இன்று காலை மேட்டூர் அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 5,054 கன அடியாக அதிகரித்தது. மாலையில் வினாடிக்கு 16,577கன அடியாக அதிகரித்து உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று காலை 43.83அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மாலையில் 44.62அடியாக உயர்ந்துள்ளது கடந்த எட்டு மணி நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 0.79அடிஉயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.59டிஎம்சி ஆக உள்ளது.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்