மேற்குவங்க கோர ரயில் விபத்து.. FIR-ல் வெளியான அதிர்ச்சி தகவல்

மேற்குவங்க கோர ரயில் விபத்து.. FIR-ல் வெளியான அதிர்ச்சி தகவல்

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் சென்றது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருயிதாஸா என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியது. இதில், பயணிகள் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்தன.

தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்பு படையினர், ரயிலுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 8 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், நூலிழையில் உயிர் தப்பிய பயணி ஒருவர், ரயில் விபத்தின் கோர நிகழ்வை பகிர்ந்துக் கொண்டார்.

விளம்பரம்

Also Read :
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா?

கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் விபத்து குறித்து உதவி கோருவதற்கு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகள் போர் கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் செல்ல உள்ளார். சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் விரைவு ரயிலில் இருந்த GUARD உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
West Bengal train accident

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்