மேற்குவங்க நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 பேர் பலி!

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: வெப்பம்.. நெரிசல்.. சாதனைக்காக நடந்த விமான சாகசத்தை சோதனையாக்கியது எது?

இதுதொடர்பாக காவல் அதிகாரி ஒருவரி கூறுகையில்,

தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இன்று காலை வெடி விபத்து எற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வெடிவிபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்குவங்க

வெடி விபத்தில் சிலரது உடல்கள் துண்டு துண்டாக சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நிலக்கரி சுரங்கத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் இருந்ததே விபத்துக்கு காரணமாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேலின் ஹைஃபா நகரை ஏவுகணைகளால் தாக்கிய ஹிஸ்புல்லா!

இதையடுத்து உயிரிழந்த சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பிற உள்ளூர் மக்கள் சுரங்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது. நிலைமையை கட்டுக்குள கொண்டுவர போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம், பீர்பூமில் உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு பணிபுரிந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்