மேற்கு வங்கத்தில் 48 மணி நேரத்தில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு: பாஜக

மேற்கு வங்கத்தில் 48 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பதிவில், “சிறுமிகள் உள்பட 7 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த 48 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும், அதில் சில கொலைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மம்தா பானர்ஜி எந்த முதல்வரும் வெட்கப்படக் கூடிய வகையில் மருத்துவர்களை மிரட்டுவது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த வன்கொடுமை சம்பவங்களின் பட்டியலையும் மால்வியா வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு மமதா மீண்டும் கடிதம்!

”மமதா பானர்ஜியின் விளம்பரக் குழுவான மேற்கு வங்க காவல்துறை ’இது எதிர்க்கட்சியினரின் சதி’ ‘தவறான செய்தி’ என்ற அறிவிப்புகளுடன் தயாராக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மமதா தனது 'ஊழல்' மற்றும் 'திறமையின்மை' வெளிப்பட்டுவிடும் என்பதால் ஆர்.ஜி. கார் கல்லூரி வழக்கில் ஆதாரங்களை 'மாற்றியமைத்ததாக' குற்றம் சாட்டிய அமித் மால்வியா மாநிலத்தில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து மமதா வசதியாக மறந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்க பெண்கள் ஆணையமும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், திரிணாமூல் காங்கிரஸின் 'பி-அணி'யாக மாறி, மமதா பானர்ஜியை ஆதரித்துப் பேசுவதாகவும் அமித் மால்வியா குற்றம் சாட்டினார்.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்