மேற்கு வங்க தலைமைச் செயலராக மனோஜ் பந்த் நியமனம்

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலராக மூத்த அதிகாரி மனோஜ் பந்த் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை செயலராக இருந்த பந்த், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழித் துறைக்கு மாற்றப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயம்: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

1991-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பந்த், சனிக்கிழமை ஓய்வு பெறும் பகவதி பிரசாத் கோபாலிகாவுக்குப் பிறகு பதவியேற்கிறார்.

அதேசமயம் மனோஜ் பந்த் வகித்த நிதித்துறை செயலர் பதவிக்கு பிரபாத் குமார் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மே 31 அன்று ஓய்வு பெறவிருந்த 1989-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி கோபாலிகாவுக்கு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!