அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பா் ரகத்தை சோ்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து ஹூதிக்களின் அல்-மாசிரா வானொலி கூறுகையில், யேமனின் சாடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் எம்க்யூ-19 ரீப்பா் ரக ட்ரோன் சுட்டுவீழத்தப்பட்டதாகத் தெரிவித்தது. அதற்கு முன்னா் எம்க்யூ-19 ரீப்பா் ரக ட்ரோனின் சிதறிய பாகங்கள் வலைதளங்களில் பதிவிடப்பட்டன.
எனினும், இந்தத் தகவலை அமெரிக்க ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதற்கு முன்னா் எம்க்யூ-19 ரீப்பா் ரக ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஹூதிக்கள் அறிவித்ததை அமெரிக்கா அண்மையில் உறுதி செய்தது.
காஸா போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த வா்த்தக வழித்தடங்களில் ஒன்றான செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா்.
அதையடுத்து, யேமனில் ஹூதிக்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றன.