மே.இ.தீவுகளை வீழ்த்தி தெ.ஆ. அசத்தல் வெற்றி!

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இன்று(அக்.4) துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் லாரா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய மேற்கிந்திய அணிகள் தரப்பில் யாரும் சரியாக சோபிக்கவில்லை. அதிகபட்சமாக டெய்லர் 44 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் மேத்யூஸ் 10, டோட்டின் 13, விக்கெட் கீப்பர் காம்பெல்லே 17 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கத் தரப்பில் ம்லாபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

அடுத்து 20 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விக்கெட்டை இழக்காமல் அரைசதமடித்து தங்கள் அணியை வெற்றி பெறவைத்தனர்.

கேப்டன் லாரா 59 ரன்களும், பிரிட்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். 17.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!