மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்துக்கு 2-ஆவது இடம் மாநில அரசு தகவல்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 2022-23-ஆம் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. 2023-24-ஆம் ஆண்டில் சில மாநிலங்களுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகள் வெளியிடப்படவில்லை.

தமிழ்நாட்டின் பணவீக்க விகிதங்கள் 2022-23-ஆம் நிதியாண்டில் 5.97 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 5.37 சதவீதமாகவும் இருந்தன.

இதே காலகட்டத்தில் அகில இந்திய பணவீக்க விகிதங்கள் 6.65 மற்றும் 5.38 சதவீதமாக இருந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி