மோசடியில் ரூ.27 லட்சம் இழந்த நொய்டா பெண்.. அவர் செய்த ஒரே தவறு?

மோசடிகள் பல வகை.. மோசடியாளர்களும் பல வகை.. நாள்தோறும் புதுப்புது மோசடிகள் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், 44 வயது நொய்டா பெண் செய்த ஒரே ஒரு தவறால் ரூ.27 லட்சத்தை இழந்துள்ளார்.

இது குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வாட்ஸ்ஆப் காலில் ஒரு பெண் பேசியிருக்கிறார். கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவும், இ-சிம் வசதி புதிதாக வந்திருப்பதால், அதனை ஆக்டிவ் செய்துகொண்டால், செல்போன் தொலைந்தாலும் எளிதாக சிம்கார்டு பெறலாம், எண்களை இழக்க வேண்டாம் என்று அப்பெண் கூறியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மை என நம்பி, அப்பெண் சொல்வதையெல்லாம் செய்திருக்கிறார். ஒரு கோடு வரும், அதனை பதிவிடவும் என்று சொல்லியிருக்கிறார். அவர் பதிவிட்ட சிறிது நேரத்தில், அவரது செல்போன் செயலிழந்துவிட்டது.

அது மட்டுமல்ல, அவர் செல்போன் செயலிழந்த போதும் கூட, செப்டம்பர் 1ஆம் தேதியே புது சிம் வந்துவிடும் என்றுதான் நினைத்திருக்கிறார்.

கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்: பழைய விடியோவைப் பகிர்ந்து டெலீட் செய்த திருமாவளவன்

ஆனால், செப்டம்பர் 1ஆம் தேதி புதிய சிம்கார்டு வராததால், தனது செல்போன் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்திருக்கிறார். அவர்கள் இவரது பிரச்னை தெரியாமல், அதே எண்ணில் புதிய சிம் கார்டுக்கு அப்ளை செய்யுமாறு கூறியிருக்கிறார்கள். அவரும் புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுள்ளார்.

அப்போது அவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவல்களில், அவரது வைப்புத் தொகைகள் எடுக்கப்பட்டுவிட்டன, இரண்டு வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிட்டது, அவரது பெயரில் செயலிகள் மூலம் ரூ.7.40 லட்சம் அளவுக்கு கடன் பெறப்பட்டுள்ளது என்று குறுந்தகவல்கள் வந்துள்ளன.

அவரது செல்போன் மூலமாக, மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடித்து அதன் மூலம் அப்பெண்ணிடமிருந்து ரூ.27 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து