மோசடி பரிவர்த்தனைகள் – ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.66 கோடி அபராதம்!

மோசடி பரிவர்த்தனைகள் – ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.66 கோடி அபராதம்!

தேசிய பாதுகாப்பு கமாண்டர் பெயரில் நடந்த மோசடியான பணப் பரிவர்த்தனைகளை கண்டறிந்து புகார் அளிக்கத் தவறிய விவகாரத்தில் ஆக்சிஸ் வங்கிக்கு, ரூ.1.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றாக ஆக்சிஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் ஏராளமான கணக்குகள் இருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பு கமாண்டர் பெயரில் மோசடியாக ஒரு கணக்கு தொடங்கப்பட்டு, அதில் பல பணவர்த்தனைகள் நடந்துள்ளன. அதாவது, மோசடியான அந்த வங்கிக் கணக்கை தொடங்கிய நபர், சமூகவலைதளங்களில் பலரிடம், நான் NSG கமாண்டர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு மோசடி செய்த பணத்தை வரவழைக்க ஆக்சிஸ் வங்கிக் கணக்கை பயன்படுத்தியுள்ளார்.

விளம்பரம்

இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், தேசிய பாதுகாப்புப் படை வீரரின் பெயரில் தொடங்கப்பட்டு, பரிவர்த்தனை நடந்த கணக்கை கண்டறிய தவறியதோடு, அது குறித்து புகாரளிக்க தகுந்த வழிமுறைகளை வைக்கத் தவறியதற்காக ஆக்சிஸ் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களின் முழு பட்டியல் – இதோ…

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13ன் படி, கடந்த ஜூன் 3ஆம் தேதி மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பண மோசடி குறித்து ஆக்சிஸ் வங்கியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு உடனடியாக பதில் அளிக்கப்படவில்லை என்பதாலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

அத்துடன், பண மோசடிக்காக தொடங்கப்பட்ட கணக்கிற்கு அனுமதியளித்த ஆக்சிஸ் வங்கியின் மேலாளர் மீதும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள நிதி நுண்ணறிவுப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bank
,
bank fraud

Related posts

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு