மோசடி வழக்கு: தேவநாதனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்!

சென்னை: மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவை 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விசாரணைக்கு பிறகு மீண்டும் செப்டம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆஜர்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் ராஜிநாமா!

சென்னை மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் இந்து சாசுவத நிதி லிட்’ பெயரில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு முதிா்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படாமல் இருந்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட பிரசாத் என்பவா் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் நிா்வாகி தேவநாதனை கைது செய்தனர். மேலும், அதன் இயக்குநா்களான குணசீலன் மற்றும் மகிமைநாதன் ஆகியோரையும் கைது செய்தனா்.

மேலும், மயிலாப்பூா் நிதி நிறுவனத்தின் மீது 300-க்கும் மேற்பட்ட புகாா்களும், தேவநாதன் மீது 800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில், நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் 27 வங்கிக் கணக்குகளை குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.

அதேபோல், தேவநாதனுக்கு தொடர்புடைய 8 கட்டடங்களுக்கும் இதுவரை சீல் வைத்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள நிதி நிறுவனத்தின் சில இயக்குநா்களையும் போலீஸாா் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

பணி அழுத்தமா? அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணம்!

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள்: அமித் ஷா!

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா