மோசமான பணிக் கலாசாரம்: மாதவிக்கு எதிராக செபி ஊழியர்கள் புகார்!

செபி தலைவர் மாதவி புரி புச் மீது அந்த அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் மத்திய நிதியமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) பணிபுரியும் ஊழியர்கள் நிதி அமைச்சகத்துக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில், ஊழியர்களிடம் கடுமையான வார்த்தையை மாதவி புச் பயன்படுத்துவதாகவும், எட்ட முடியாத இலக்குகளை நிர்ணயம் செய்து பணி செய்யவிடாமல் தொல்லை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதியே செபி அதிகாரிகளால் நிதியமைச்சகத்துக்கு இந்த புகார் அனுப்பப்பட்ட நிலையில், அதானி விவகாரத்தை தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ. 16.8 கோடி பணம் வாங்கிய செபி தலைவர் மாதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

செபி ஊழியர்களின் புகார் என்ன?

“செபி ஊழியர்களுக்கு மரியாதை குறைபாடு” என்ற தலைப்பில் செபியின் ஊழியர்கள் கையெழுத்திட்டு மாதவி புச் மீதான புகாரை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த புகார் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

“செபியின் தலைவர் மாதவி புரி புச், கடுமையான மற்றும் தொழில்முறையற்ற வார்த்தைகளால் ஊழியர்களிடம் பேசுகிறார். ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்கிறோம் எனக் கண்காணிப்பதுடன், அடைய முடியாத இலக்குகளை நிர்ணயம் செய்கிறார். இது மனநலனை பாதிப்பது மட்டுமின்றி வேலை – வாழ்க்கை சமநிலையை இழக்கச் செய்துள்ளது.

பணியாளர்கள் ரோபோக்கள் அல்ல, அளவுக்கு மீறிய இலக்குகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. நிர்வாக அமைப்பை மாற்றி, பிற்போக்குத்தனமான கொள்கைகளை கொண்டு வந்துள்ளனர். மிகவும் உயர்நிலையில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை மிகச் சாதாரணமாக கடும் சொற்களை பயன்படுத்துகிறார்கள்.

மூத்த நிர்வாகிகளிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லை. பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பயந்து பலரும் குரல் எழுப்ப மறுக்கின்றனர். அவநம்பிக்கை மற்றும் பயமானது கடந்த 2 – 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

கடுமையான மற்றும் தொழில்முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஊழியர்களை அடிப்பணிய வைக்கும் இந்த தலைமைத்துவ முறை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

செபி தலைவா் மாதபிக்கு ஐசிஐசிஐ ஓய்வுகால பலன்கள் சீராக வழங்கப்படாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

மாதவிக்கு ரூ. 16.80 கோடி வழங்கிய ஐசிஐசிஐ

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) தலைவர் மாதவி புரி புச் செபியின் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் ஐசிஐசிஐ வங்கி மீதான முறைகேடுகளில் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களிடம் ரூ. 16.80 கோடி வரை சம்பளமாகப் பெற்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை வைத்தது.

இதற்கு விளக்கம் அளித்த ஐசிஐசிஐ வங்கி, மாதவி புரி புச் 2013 ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்ற பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட தொகை அனைத்தும், அவரது பணிக்காலத்துக்கு உரியவை மற்றும் ஓய்வூதியப் பலன்கள்தான் எனத் தெரிவித்துள்ளது.

மாதவி புரி புச் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை