மோடியின் கால்களில் விழுவதா? நிதிஷ்குமாரை கடுமையாக சாடிய பிரசாந்த் கிஷோர்

பாட்னா,

தேர்தல் வியூக நிபுணரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம், பாகல்பூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: "நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது அவரை ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவரது மனசாட்சியை விற்பனைக்கு வைக்கவில்லை. ஒரு மாநிலத்தின் தலைவர், அதன் மக்களின் பெருமை. ஆனால், பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து நிதிஷ்குமார் பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தினார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் பேசுகிறார்கள். ஆனால் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தனது பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்துக்கான நன்மைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தவில்லை. 2025 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிப்பதை உறுதிசெய்ய அவர் பிரதமர் மோடியின் கால்களைத் தொடுகிறார்.' இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்