மோடியின் புதிய அமைச்சரவையில் 20 அரசியல் வாரிசுகள் – ராகுல் காந்தி

மோடியின் புதிய அமைச்சரவையில் 20 அரசியல் வாரிசுகள் – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடியின் புதிய அமைச்சரவையில் 20 அரசியல் வாரிசுகள் இடம்பெற்றிருப்பதாகவும், இதுதான் மோடியின் குடும்ப அரசாங்கம் எனவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக எப்போதும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று வாரிசு அரசியல். இந்தநிலையில் தற்போது மோடியின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க:
பிரதமாராக பொறுப்பேற்ற பின் மோடி போட்ட முதல் கையெழுத்து? என்ன தெரியுமா?

முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் குமாரசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், முன்னாள் எம்.பி., ஜெய்ஸ்ரீ பானர்ஜி மருமகன் ஜெ.பி.நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் கோயல் மகன் பியூஷ் கோயல், முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதானின் மகன் தர்மேந்திர பிரதான் என 20 பேர் அடங்கிய வாரிசுகளின் பட்டியலை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

पीढ़ियों के संघर्ष, सेवा और बलिदान की परंपरा को परिवारवाद कहने वाले अपने ‘सरकारी परिवार’ को सत्ता की वसीयत बांट रहे।
कथनी और करनी के इसी फर्क को नरेंद्र मोदी कहते हैं! pic.twitter.com/eAlfemxAJk

— Rahul Gandhi (@RahulGandhi) June 11, 2024

விளம்பரம்

இதுதான் மோடியின் குடும்ப அரசாங்கம் எனவும், மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Rahul Gandhi
,
Union cabinet Ministry

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்