மோடியை சந்திக்கிறார் டிரம்ப்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடியுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் டெலாவோ் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் 4-ஆவது க்வாட் தலைவா்கள் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா்.

இதற்காக, அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பா் 21) தொடங்குகிறாா்.

இந்த நிலையில், மிச்சிகனின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், அடுத்த வாரம் மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த சந்திப்பானது எப்போது, எங்கே நடைபெறும் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.

மேலும், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெரியளவில் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் டிரம்ப் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்!

மோடி – டிரம்ப் இடையேயான நட்பு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்த காலகட்டத்தில் மோடியுடன் நெருங்கிய நட்பைப் பகிர்ந்து கொண்டார்.

இதற்கு அமெரிக்காவில் நடந்த ‘ஹெளடி மோடி’ நிகழ்வும், இந்தியாவில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வும் சான்றாக உள்ளன.

வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடியை குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்பை சந்திக்கவுள்ளதாக அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!