மோடி பிறந்தநாள்: 5 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டது எப்படி?

பிரதமர் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்த நாளை, நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

26 லட்சம் வீடுகள்

பிரதமர் மோடி தனது 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கடகனாவில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 26 லட்சம் வீடுகளை திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கடகனா பகுதிக்குச் சென்று திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடுகிறார்.

அதன்பிறகு, ஜனதா மைதானத்துக்குச் செல்லும் பிரதமர், ஒடிசா மாநில அரசின் சுபத்ரா யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ், 21 முதல் 60 வயதுடைய பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

மேலும், ரூ. 2,800 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மற்றும் ரூ. 1,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தில்லி முதல்வராகிறார் அதிஷி!

2023

கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் விஸ்வகர்மா என்ற திட்டத்தை கடந்தாண்டு மோடியின் பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார்.

சர்வதேச கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டர் மற்றும் தில்லி விமான நிலையத்தின் எக்ஸ்பிரஸ் லைன் ஆகியவற்றின் விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், பிரதமரின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், 73-ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 73 கிலோ எடையுள்ள லட்டு வெட்டப்பட்டது.

73 கிலோ எடையுள்ள லட்டு

2022

சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நமீபியாவிலிருந்துகொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி.

2021

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மட்டும் 2.26 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை படைத்தது.

2020

கரோனா தொற்று காரணமாக மோடியின் பிறந்த நாள் பெரிதளவில் கொண்டாடப்படவில்லை. நாடு முழுவதும் பல இடங்களில் ஏழை மக்களுக்கு ரேசன் பொருள்கள் விநியோகம் மற்றும் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

2019

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும், நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதையொட்டி கொண்டாடப்பட்ட விழாவில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்