மோடி புதிய அமைச்சரவையில் ஆந்திராவுக்கு 5 அமைச்சர்கள்…

மோடி புதிய அமைச்சரவையில் ஆந்திராவுக்கு 5 அமைச்சர்கள்… யார் யார் தெரியுமா?

மோடி

நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் ஆந்திரா மாநிலத்திற்கு 5 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், மூத்த தலைவர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இன்றும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு 5 அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் 3 பொறுப்புகள் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒன்று பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும், மற்றொன்று பாஜகவை சேர்ந்த ஒருவருக்கும் ஒதுக்கப்பட உள்ளது. ஆந்திராவை சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், ராஜஸ்தான் மாநில மேலிட பொறுப்பாளருமான புரந்தேஸ்வரிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:
மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

நதிநீர் பிரச்சனையால் நீர்வளத்துறை, வேளாண் இலாகாக்களை தென்னிந்திய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க பாஜக விரும்பவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election Results 2024

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்