மோடி மீது வெறுப்புணர்வு..? -வெளிப்படையாக பதில் அளித்த ராகுல்

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு பல தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க சுற்று பயணத்தின்போது ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது வெறுப்புணர்வு இருக்கிறதா? என்ற கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் மோடியை வெறுக்கவில்லை. அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. அவருடைய கருத்தில் நான் உடன்படவில்லை. ஆனால், நன் அவரை வெறுக்கவில்லை. அவருக்கென வேறுபட்டதொரு கண்ணோட்டம் உள்ளது, எனக்கென ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

I don't hate Mr. Modi.
He has a point of view; I don’t agree with the point of view, but I don’t hate him.
He has a different perspective, and I have a different perspective.
: Shri @RahulGandhi at the Georgetown University
Washington DC pic.twitter.com/y3p5OW4CTE

— Congress (@INCIndia) September 10, 2024

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்