மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெற்ற தென்னிந்திய முகங்கள்

PM Modi Oath Ceremony | மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெற்ற தென்னிந்திய முகங்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ

எல்.முருகன், நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள் உள்பட 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, இன்று பிரதமர் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்ட நிலையில், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்றார். இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் உளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தென்மாநிலங்களிலிருந்தும் பலர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், எல்.முருகனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவர் இம்முறையும் இணையமைச்சராக பதவியேற்றுள்ளார்.

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர்.

கர்நாடகாவில் பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான எச்.டி.குமாரசாமிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மாசானி ஆகிய இருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜக சார்பில் ஸ்ரீனிவாச வர்மாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்இதையும் படிங்க : 27 ஓபிசி அமைச்சர்கள், 11 பெண்கள், 5 சிறுபான்மையினர் : அமைச்சரவையில் யார், யாருக்கு இடம்? – முழு விபரம் இதோ

அதேபோல தெலங்கானாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பன்டி சஞ்சய், கிஷான் ரெட்டி ஆகியோருக்கும் அமைச்சர்களாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பாஜக சார்பாக போட்டியிட்டு வென்று கவனம் ஈர்த்த நடிகர் சுரேஷ் கோபியும் இணை அமைச்சராகியுள்ளார். கேரள மாநில பாஜகவிலிருந்து ஜார்ஜ் குரியன் அமைச்சராவது இதுவே முதன்முறையாகும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Modi Cabinet
,
Narendra Modi
,
NDA Alliance
,
union minister

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்