ம.பி-யில் அதிகாலையில் ஷாக்: ரயில் தடம்புரண்டு விபத்து – என்ன நடந்தது?

ஜபல்பூரில் தடம்புரண்ட ரயில் : டெட் – ஸ்டாப் வேகத்தால் தப்பித்த பயணிகள்!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.

இந்தூரில் இருந்து ஜபல்பூர் ரயில் நிலையம் நோக்கி இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில் வந்துக்கொண்டிருந்தது. ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் வந்துக்கொண்டிருந்தபோது ரயில் திடீரென தடம்புரண்டது. அதிகாலை 5.50 மணிக்கு நடந்த இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் டெட்-ஸ்டாப் வேகத்தில் இருந்ததால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

Also Read:
ஆந்திராவை புரட்டிப்போட்ட வெள்ளம்.. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்த வாக்குறுதி இதுதான்!

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Accident
,
Indian Railways
,
Madhya pradesh
,
Train Accident

Related posts

வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் மிலாடி நபி பண்டிகை கோலாகலம்