யுஜிசி-நெட் தோ்வு ரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

யுஜிசி-நெட் தோ்வு ரத்துக்கு
எதிரான மனு தள்ளுபடியுஜிசி-நெட் தோ்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

யுஜிசி-நெட் தோ்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற இந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது.

இதற்கு எதிரான மனுவை வழக்குரைஞா் ரோஹித் பாண்டே என்பவா் மூலம் வழக்குரைஞா் உஜாவல் கௌா் தாக்கல் செய்திருந்தாா். இதை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘வழக்குரைஞா் ஒருவா் எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவா்கள் அவா்களாகவே வழக்கு தொடரட்டும்’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனா். மேலும், இந்த மனுவை தகுதி அடிப்படையில் நிராகரிக்கவில்லை எனவும் நீதிபதிகள் கூறினா்.

நாடு முழுவதும் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி-நெட் தோ்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தததால் இந்தத் தோ்வை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?