நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 23.5 லட்சம் கோடிக்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளன. ஒரு டீ கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ பணபரிவர்த்தனை இருக்கிறது.
இந்நிலையில், ந்த அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 23.5 லட்சம் கோடிக்கு யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
கடந்த 2016 ஏப்ரல் முதலான காலகட்டத்தில் இந்த தொகையே அதிகமாகும்.
இதையும் படிக்க | பாசிசத்துக்கு எதிரான வெனிசுவேலா மாநாட்டில் பங்கேற்க எம்.பி.க்கு அனுமதி மறுப்பு!
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில், செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், அக்டோபரில் பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பணப்பரிவர்த்தனை தொகை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் தினசரி பணப்பரிவர்த்தனை ரூ. 75,801 கோடி என்றும் செப்டம்பரில் இதன் மதிப்பு ரூ. 68,800 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐஎம்பிஎஸ் பணப்பரிவர்த்தனை ரூ. 6.29 லட்சம் கோடிக்கு நடந்துள்ளது.
பாஸ்ட்டேக் பணப்பரிவர்த்தனையும் 8% அதிகரித்து ரூ. 6,115 கோடிக்கு நடைபெற்றுள்ளது.
இந்தியர்கள் யுபிஐ மூலமாக அதிகம் செலவளிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 2024 மார்ச் மாதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இரு மடங்காகியுள்ளது.