யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்லீப்பர் டைம் என்னும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கும் அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. முன்பு பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது அனைத்துவகையான பயர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூடியூப் நிறுவனம், பயனர்களுக்கு விடியோக்களாக அனைத்துவிதமான தகவல்களையும் வழங்குகிறது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். கூகுளை பயன்படுத்தும் அனைவரும் யூடியூபையும் பயன்படுத்துவார்கள் எனலாம்.

பயனர்களின் வசதிக்கேற்ப யூடியூப் அவ்வபோது பல்வேறு புதிய அம்சங்களையும், விதிமுறைகளையும் வகுத்துவருகிறது. அந்தவகையில் தற்போது அனைத்து பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

முதல் அம்சம்

யூடியூபில் ஒளிபரப்பாகும் விடியோக்களின் வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இதற்கு முன்பு 0.25 புள்ளிகள் மட்டுமே குறைக்க முடியும். ஆனால் தற்போது மிகவும் துல்லியமாக 0.05 புள்ளிகள் வரை விடியோக்களின் வேகத்தைக் குறைக்கலாம். இதேபோன்று 2x வேகத்தில் வேகத்தையும் கூட்டலாம். ஆனால், தனிப் பயனர்களுக்கு (customize) மட்டுமே இந்த அம்சம் உள்ளது.

இரண்டாவது அம்சம்

ஸ்லீப்பர் டைம் என்னும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கும் வசதி. இதன்மூலம் 10, 15, 20, 30, 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணிநேரம் என்ற குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு செயலியில் இருந்து வெளியேறி திரை தானாக அணைந்துவிடும். பயனர்கள் இந்த நேரத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

மூன்றாவது அம்சம்

செல்போனை கிடைமட்டமாக அல்லாமல் குறுக்குவெட்டாகப் பயன்படுத்தும்போதும், அதாவது முழுத் திரையில் பயன்படுத்தும்போதும் பிரவுஸிங் செய்யலாம். இது ஐஓஎஸ் தளங்களில் மட்டுமே சாத்தியமாவதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது.

பாடல்களுக்கெட் தனியாக யூடியூப் மியூசிக் என்ற அம்சத்தை கடந்த ஆண்டு யூடியூப் அறிமுகம் செய்திருந்தது இசைப்பிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!