ரசிகர்களைக் கவரும் மனசிலாயோ!

வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனிருத் இசையமைத்த வேட்டையன் படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலை வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

மேலும் சில வரிகளுக்காக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியுள்ளனர். 27 ஆண்டுகளுக்குப் பின் தொழில்நுட்ப உதவியோடு ரஜினி படத்தில் பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன்.

ரகு தாத்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மேலும், இப்பாடலைக் கேட்கும் ரசிகர்கள் இந்தாண்டின் வைரல் பாடல்களில் ஒன்றாக இது இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் – அனிருத் கூட்டணியில் இதற்கு முன் உருவான, ‘மரண மாஸ்’ (பேட்ட), சும்மா கிழி (தர்பார்), தலைவர் நிரந்தரம் (ஜெயிலர்) ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தற்போது, இந்த வரிசையில் மனசிலாயோ பாடலும் இடம்பெறும் எனத் தெரிகிறது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!