ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

ரஜினிகாந்த் உடல்நிலை எவ்வாறு உள்ளது என கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் நன்றாக உள்ளார். நேற்றிரவு கூட அவரிடம் பேசினேன். மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்குனு 40 நாட்கள் முன்னாடியே ரஜினிகாந்த் எங்ககிட்ட சொல்லிவிட்டார். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இடையில் 10 நாள் படப்பிடிப்புக்கு ஓய்வு. அக்டோபர் 15 முதல் படப்பிடிப்பு மீண்டும் நடைபெறுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி நிறைய செய்திகள் வந்திருந்தன. அது எங்களுக்கே பயமாக இருந்தது. ஆனால் அதில் எதுவும் உண்மை கிடையாது. ரஜினிகாந்த் உடல்நிலை தான் முக்கியம். இறைவன் அருளால் அவர் நன்றாக இருப்பார்.

ஜீவாவின் பிளாக் பட வெளியீட்டுத் தேதி!

விஜய் சினிமாவில் நடிக்க வேண்டும் என எனக்கும்தான் ஆசை. ஆனால் அவரின் நோக்கம் வேறு ஒன்றில் இருக்கிறது. பவன் கல்யாண் சொல்லியிருந்தது எனக்கு பெருமையாக இருந்தது என்றார். 'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் செப். 30 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில், ரஜினியின் இதயத்திலிருந்து வரும் முக்கிய தமனி எனும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை சரி செய்ய ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, உடல்நிலை சீராக இருப்பதால் மருத்துவமனையிலிருந்து விரைவில் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.

Related posts

Editorial: What Next For Classical Languages?

Editorial: Central Railway Commuters Are Given Short Shrift

The Importance Of Being Sonam Wangchuk