ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைதளப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்விரைந்து நலம் பெற விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார்?

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் திங்கள்கிழமை மாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்