ரத்தன் டாடாவின் இழப்பு இன்னும் பல ஆண்டுகள் இருக்கும்: பில்கேட்ஸ்

ரத்தன் டாடாவின் இழப்பு இன்னும் பல ஆண்டுகள் இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

வயது முதிர்வு காரணமாக தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, பில்கேட்ஸ் என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸும், ரத்தன் டாடாவை நினைவு கூர்ந்து தனது லிங்க்டு இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?

"ரத்தன் டாடா ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு இந்தியாவிலும் உலகிலும் அழியாத முத்திரை பதித்துள்ளது. அவருடைய வலுவான நோக்கம், மனிதகுலத்திற்கான சேவை என்னை பெரிதும் ஈர்த்தது.

மக்கள் ஆரோக்கியமான, வளமான வாழ்க்கையை வாழ உதவும் பல முயற்சிகளில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அவரது இழப்பு இன்னும் பல ஆண்டுகள் உலகம் முழுவதும் உணரப்படும். ஆனால் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியமும், அவர் அமைத்த முன்மாதிரியும் பல தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக