ரத்தன் டாடா எப்போதும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கம்: கேஜரிவால்

தொழிலதிபர் ரத்தன் டாடா முதுமை காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு தில்லி முதல்வர், துணைநிலை ஆளுநர் மற்றும் கட்சியின் தலைவர் கேஜரிவால் ஆகியோர் ரத்தன் டாடாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதுமை தொடர்பாக பல்வேறு பாதிப்புகள் காரணமாக ரத்தன் நேவல் டாடா(86) மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்களன்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடலநிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் உறுதி செய்தார்.

ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவாலின் எக்ஸ் பதிவில்,

இந்தியா தனது உண்மையான ரத்தினமான மாணிக்கத்தை இழந்துவிட்டது. சாத்தியமற்றதை சாத்தியமாக்கியவர். ரத்தன் டாடடாவின் பாரம்பரியம் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று அவரி தெரிவித்தார்.

துணைநிலை ஆளுநர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், மகத்தான மரபுகளை முன்னெடுத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவற்றைச் செழுமைப்படுத்தி மேம்படுத்தினீர்கள். ரத்தன் டாடாவுக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலிகள் மற்றும் இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா உங்களை என்றென்று நினைவில் கொள்ளும்.

முதல்வர் அதிஷியின் எக்ஸ் பதிவில், ரத்தன் டாடாவின் நெறிமுறை தலைமையை எப்போதும் நாட்டின் மற்றும் மக்கள் நலனிலும் அக்கரை செலுத்துபவர். அவரது கருணை, பணிவு மாற்றத்தை ஏற்படுத்துவதில் உள்ள ஆரவம் என்றென்றும் நினைவில் நிற்கும்.

அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை வரவிருக்கும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.

Related posts

Tata Scholarship Explained: Eligibility, Benefits, & Application Process For Indian Students At Cornell University

Jamia Milia Islamia CDOE Admission 2024: Registration Window For BEd Now OPEN

Nana Patole: From Assembly Speaker To President Of Maharashtra Pradesh Congress