ரத்த சோகையை போக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் நீட்டிப்பு!

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை ஜூலை மாதம் முதல் டிசம்பர் 2028 வரை தொடர்ந்து வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், பிறநலத்திட்டங்களுக்கு ரூ. 17,082 கோடி ஒதுக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹரியாணா: 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி 2022 ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துகள் அடங்கியுள்ளதாகவும், இந்த சத்துகள் ரத்த சோகையைத் தடுப்பதுடன், கருவளா்ச்சி, ரத்த உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக