ரயில்வேயில் நவீன தொழில்நுட்பங்கள்: இந்தியா – ஆஸி. ஒப்பந்தம்!

ரயில்வே துறை சம்பந்தப்பட்ட பொறியியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் குஜராத்தின் வதோதராவில் இந்திய ரயில்வே துறையின்கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகமான கதி சக்தி வித்யாலயா(ஜிஎஸ்வி) நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரயில்வே துறைசார் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிறுவனமான மோனாஷ் ரயில்வே தொழில்நுட்ப நிறுவனம்(ஐஆர்டி) உலகளவில் பல நாடுகளிலும் தங்களது சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் ரயில்வே அமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இரு நிறுவனங்களுக்கும் இடையே கல்வியறிவு பரிமாற்றம், புதுப்புது கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!