ரயில்வே அமைச்சர் ரீல் அமைச்சராக மாறிவிட்டார்: காங்கிரஸ்

ரயில்வே துறையின் அலட்சியத்தால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதாக, ரயில்வே துறை அமைச்சர் மீது காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், நாடு முழுவதும் ரயில்களைக் கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், அவர் பேசியதாவது “இப்போதெல்லாம், தண்டவாளங்களைச் சுற்றி சிலிண்டர்கள், மரம், இரும்புகள் முதலானவை கிடப்பதைக் காண்கிறோம். இதற்கு முன்பு இது நடந்ததில்லை.

முன்னதாக, ரயில் தடங்களைத் திறம்பட கண்காணித்து பராமரிக்கும் குழுக்கள் இருந்தன. ஆனால், தற்போது அந்தக் குழுக்கள் கலைக்கப்பட்டு விட்டன.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் அரசியலில் இருக்கிறோம். ஆனால், இதுபோன்ற அலட்சியத்தை ஒருபோதும் சந்தித்ததில்லை.

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்: பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

ரயில்வே அமைச்சர்களுக்கு ரயில்வே துறையை இயக்குவதிலோ அல்லது பாதுகாப்பை உறுதி செய்வதிலோ நாட்டம் இல்லை. மாறாக, அந்த ரயில்வே அமைச்சர் ஒரு ரீல் அமைச்சராக மாறிவிட்டார். அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பல ரீல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது ரீல்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

இதன் விளைவாகதான், ரயில்வே துறையின் மூலமாக விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ரயில்வே துறையில் நிலவும் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாகதான், இந்த சம்பவங்களை அரசால் தடுக்க முடியவில்லையா? அதிகரித்து வரும் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதிலாக, ரீல்களை உருவாக்குவதில்தான் ரயில்வே அமைச்சர் கவனம் செலுத்துகிறார்.

ரயில் தடங்களை கண்காணித்து வந்த ஆய்வு குழுக்களை மீண்டும் அழைத்து வாருங்கள். இந்த சம்பவங்களுக்கு அரசு, ரயில்வே துறையும் மற்றும் அமைச்சர் மட்டுமே பொறுப்பு. துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், தேவையான நியமனங்களை மீண்டும் நிறுவுதல் முதலானவற்றில்தான் கவனம் செலுத்தப்பட வேண்டும்’’ என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மீதும் குற்றம் சாட்டினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, மத்தியப் பிரதேசத்தில் நேபாநகர் பகுதியில், வெடிபொருள்களைப் பயன்படுத்தி ராணுவ ரயிலைக் கவிழ்க்க, சிலர் சதித்திட்டம் தீட்டியிருந்தனர். இருப்பினும், அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி உத்தரப் பிரதேசத்தில், கான்பூருக்குச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலைக் கவிழ்ப்பதற்கும், பிரேம்பூர் நிலையத்திற்கு அருகே தண்டவாளங்களில் சிலிண்டர் கிடந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. அந்த திட்டமும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!