ரயில்வே பணியிலிருந்து ராஜிநாமா செய்த வினேஷ் போகத்! காங்கிரஸில் இணைகிறாரா?

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ரயில்வே பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை புதன்கிழமை சந்தித்தனர்.

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

900 கோல்கள்..! வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ!

வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

ரயில்வேயில் பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத பெருமையான ஒன்று. தற்போது, இந்தியன் ரயில்வே பணியிலிருந்து விலகுகிறேன். அதற்கான எனது ராஜிநாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டேன். இந்த நாட்டுக்காக ரயில்வே பணியில் சேவையாற்ற வாய்ப்பளித்த இந்தியன் ரயில்வே துறைக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

भारतीय रेलवे की सेवा मेरे जीवन का एक यादगार और गौरवपूर्ण समय रहा है।
जीवन के इस मोड़ पर मैंने स्वयं को रेलवे सेवा से पृथक करने का निर्णय लेते हुए अपना त्यागपत्र भारतीय रेलवे के सक्षम अधिकारियों को सौप दिया है। राष्ट्र की सेवा में रेलवे द्वारा मुझे दिये गये इस अवसर के लिए मैं… pic.twitter.com/HasXLH5vBP

— Vinesh Phogat (@Phogat_Vinesh) September 6, 2024

வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று (செப்.6) பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி, ஒலிம்பிக் அமைப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி