“ரயில் கட்டணச் சலுகை ரத்து திரும்பப் பெறப்படுமா?” – ரயில்வே அமைச்சகம்

“ரயில் கட்டணச் சலுகை ரத்து திரும்பப் பெற மாட்டாது” – ரயில்வே அமைச்சகம் திட்டவட்டம்!

கோப்புப்படம்

ரயில் கட்டணச் சலுகை ரத்தை திரும்பப் பெறும் திட்டம் தற்போதைக்கு இல்லை என ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்ததன் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளில் 5800 கோடி ரூபாய் ரயில்வே அமைச்சகத்துக்கு வருவாய் கிடைத்ததாக ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரயில்வே அமைச்சகம், சராசரி மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ரயில்களில் கூட்ட நெரிசலைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் சோதனை ஓட்டம் ஆகஸ்ட் 15க்குள் நடத்தப்படும் எனவும் ஸ்லீப்பர் கோச்கள் கொண்ட இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
களமிறங்கிய ஸ்பெஷல் டீம்… இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காது

இதனிடையே ரயில்வே துறை சார்பில் பிப்ரவரி 26ஆம் தேதி பல பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில், சுமார் 40 லட்சம் பேர் பங்கேற்றது லிம்கா சாதனையில் இடம்பெற்று அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways
,
Train
,
Train Ticket Reservation
,
Vande Bharat

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்