ரயில் பாலத்தில்.. நூலிழையில் உயிர் தப்பிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மதுரா நகர் ரயில்வே பாலம் மீது ஏறி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் இருந்த பாலத்தின் மீது வேகமாக ரயில் கடந்துசென்றது.

நல்வாய்ப்பாக, மேம்பாலத்தின் ஓரத்தில் நின்று சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.

90% பேரால் பதில் சொல்ல முடியாத ஹார்வர்டு பல்கலை.யின் கேள்வி!

விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மாலை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, மதுராநகர் ரயில் பாலம் மீது ஏறி, கீழே ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை முக்கிய அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

அந்த ரயில் பாலமானது, ரயில் மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேம்பாலத்தின் ஓரத்தில் மிகக் குறைந்த இடைவெளியே இருக்கும். இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த மேம்பாலத்தில் திடீரென ரயில் ஒன்று வேகமாக வந்தது. உடனடியாக அவரது பாதுகாவலர்கள், சந்திரபாபு நாயுடுவை, பாலத்தின் ஓரத்தில் இழுத்து நிறுத்தினர். மிகக் குறுகிய இடைவெளியில், வேகமாக வந்த ரயில் அனைவரையும் கடந்து சென்றது.

ரயில் பாலத்தில்..

பாதுகாப்பு விதிமுறைகளை எல்லாம் உடைத்துவிட்டு, கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், நேற்றும், முன்னெச்சரிக்கை இல்லாமல், ரயில் பாலத்தின் மீதேறி தண்டவாளம் வழியாக அவர் வெள்ள பாதிப்புகளை பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

ஆந்திரத்தைப் புரட்டிப்போட்ட வெள்ளம்

கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

புயல் சின்னம் காரணமாக பெய்த கனமழையால் கிருஷ்ணா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், விஜயவாடா நகரில் அமைந்துள்ள பிரகாசம் தடுப்பணை நிரம்பியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தடுப்பணையின் 70 மதகுகளும் திறக்கப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நகரின் குறுக்கே பாயும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் புகுந்து, மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, வெள்ளம் சூழ்ந்த விஜயவாடா நகரின் குடியிருப்புகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டா்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

மீட்புப் பணிகளுக்காக 48 தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படை குழுவினா் பணியாற்றி வந்தனர். தற்காலிக நிவாரண முகாம்களில் 40 ஆயிரம் போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 197 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் 3.5 லட்சம் மக்களுக்கு ஆறு ஹெலிகாப்டா்கள் மற்றும் பல்வேறு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட், பழங்கள், பால், மருந்துகள் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வாா்டு வாரியாக அமைச்சா்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்