ரயில் விபத்து: சீரமைப்பு பணிகள் எப்போது முடிவடையும்? தெற்கு ரயில்வே தகவல்

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்! 2 பெட்டிகள் தீப்பற்றின!

இந்த நிலையில், ரயில் விபத்து குறித்து விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுடன் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மொத்தம் 22 பெட்டிகளைக் கொண்ட தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து ஏற்பட்ட வழித்தடத்தில், சுமார் 15 – 16 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் வழக்கம்போல மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ரயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று (அக். 12) மாலை முதல் பொன்னேரி – கவரப்பேட்டை வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டவாள சீரமைப்பு பணிகளில் 5 கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே பணியாளர்கள் 250 பேர், பேரிடர் மீட்புக் குழுக்களைச் சேர்ந்த 100 பேர் என மொத்தம் சுமார் 350 பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:முக்கிய ரயில்கள் ரத்து! மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்!

Related posts

காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி – தமிழக அரசு அரசாணை

திருவள்ளூர் விபத்து; 15 மணி நேரத்தில் ரெயில் போக்குவரத்து சீராகும் – தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

திருவள்ளூர் ரெயில் விபத்து; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்