ரயில் விபத்து: மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் -தெற்கு ரயில்வே

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு சரக்கு ரயில் மீது மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதையொட்டி, முக்கிய ரயில்கள் சில, மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்!

இதையும் படிக்க: சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • சென்னை சென்ட்ரல் – தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12621) – அக்.11-ஆம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், அரக்கோணம் – ரேனிகுண்டா வழித்தடத்தில் விஜயவாடா சென்றடைந்து, அதன்பின் வழக்கமான மார்க்கத்தில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ் (18190) – அக்.11-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், மேலப்பாளையம் – அரக்கோணம் – ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

  • திருச்சி – ஹௌரா அதிவிரைவு ரயில் (12664) – அக்.11-ஆம் தேதி பகல் 1.35 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் மேலப்பாளையம் – அரக்கோணம் – ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

  • ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில் (07696) – அக்.11-ஆம் தேதி காலை 9.50 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், அரக்கோணம் – ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

  • கோயம்புத்தூர் – தன்பாத் சிறப்பு விரைவு ரயில் (06063) – அக்.11-ஆம் தேதி பகல் 11.50 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், மேலப்பாளையம் – அரக்கோணம் – ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்! 2 பெட்டிகள் தீப்பற்றின!

எஸ்எம்விடி பெங்களூரு – குவாஹாட்டி விரைவு ரயில் (12509) – அக்.11-ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், மேலப்பாளையம் – ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது. அதற்கு பதிலாக, திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

எஸ்எம்விடி பெங்களூரு – டானாப்பூர் சங்கமித்ரா விரைவு ரயில் (12295) – அக்.12-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்படும் இந்த ரயில், தர்மாவரம், காஸிபேட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இதன்காரணமாக, இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட், குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

எஸ்எம்விடி பெங்களூரு – காமாக்யா ஏசி எக்ஸ்பிரஸ் (12551) – அக்.12-ஆம் தேதி காலை 8.50 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்படும் இந்த ரயில், தர்மாவரம், விஜயவாடா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதன்காரணமாக, இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

Maharashtra Assembly Elections 2024: Shiv Sena (UBT) MLA Ajay Choudhari Faces Anti-Incumbency Threat As Residents Demand Action Over Stalled Projects

Fire Safety Regulations: Govt Issues Notifications For Mumbai, Rest Of Maharashtra Following HC Warning On Development Permits

Mumbai: 15,000 Police Personnel Deployed For Dussehra Celebrations And Goddess Immersion Processions On October 12