ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது: ஆவேஷ் கான்

ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது: ஆவேஷ் கான்ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.படம் | பிசிசிஐ

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தொடக்கத்திலேயே 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆவேஷ் கான் பந்துவீச்சில் பிரையன் பென்னட் அடித்த ஷாட்டை ரவி பிஷ்னோய் அபாரமாக கேட்ச் செய்தது இந்திய வீரர்களை அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடையச் செய்தது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் பிடித்த கேட்ச் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரவி பிஷ்னோய் பிரையன் பென்னட்டின் கேட்ச்சினை பிடித்தபோது, அவர் எப்படி அந்த கேட்ச்சினைப் பிடித்தார் என்பதே தெரியவில்லை. பந்தினை வீசிவிட்டு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் எல்லாம் நடந்துவிட்டது. அவர் எப்படி அந்த கேட்ச்சினைப் பிடித்தார் என்பது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவர் மிகச் சிறந்த ஃபீல்டர். எனது பந்துவீச்சில் விக்கெட் கிடைத்திருந்தாலும், அந்த விக்கெட் கிடைத்தற்கு ரவி பிஷ்னோயின் சிறப்பான ஃபீல்டிங்கே காரணம் என்றார்.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நாளை மறுநாள் (ஜூலை 13) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்