ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை – அமைச்சர் ரகுபதி

காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கு பெற்று தர மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் திருவேங்கடம் தப்பியோட முயன்றபோது என்கவுண்ட்டர் நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை நாங்கள் மாறுபட்ட கோணத்தில் பார்ப்பது கிடையாது.

அடையாளம் தெரிந்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறோம். இந்த சம்பவத்தில் சதி செயல் எதுவும் இருக்கிறதா? என்பது புலனாய்வில் தான் தெரியவரும். காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்க தீர்ப்பாயத்திடம் வலியுறுத்துவோம். 2 மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை என்றால் மத்திய அரசுதான் மத்தியஸ்தம் காண வேண்டும். அதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்

‘பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம்’ – நிர்மலா சீதாராமன்