ரஷியாவில் விருது பெற்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!

ரஷியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் மஞ்ஞுமல் பாயஸ் விருது பெற்றுள்ளது.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையும் படிக்க: காதல் கதைகளில் கவனம் செலுத்தும் அதிதி ஷங்கர்!

தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது. அடுத்ததாக, இயக்குநர் சிதம்பரம் பாலிவுட் படத்தை இயக்குகிறார்.

விருதுடன் இயக்குநர் சிதம்பரம்.

இந்த நிலையில், ரஷியாவிலுள்ள சோச்சி நகரில் நடைபெற்ற கினோ பிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மஞ்ஞுமல் பாயஸ் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றதுடன் சிறந்த இசைக்கான சர்வதேச விருதையும் வென்று அசத்தியுள்ளது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!