ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார்.

வியன்னா,

இந்திய பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி ரஷியா சென்றார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் 22வது இந்தியா – ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், ராணுவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். பின்னர், உக்ரைன் போர் குறித்தும் விவாதித்தனர்.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று மாலை தலைநகர் டெல்லி வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்