ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும்: இத்தாலி

ரோம்,

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 925 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் – ரஷியா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என்று இத்தாலி கூறியுள்ளது. இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இது தொடர்பாக கூறுகையில், உக்ரைன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும்." என்றார். உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்றும் புதின் கூறியிருந்த நிலையில், இத்தாலி பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்