ராகவா லாரன்ஸ் – 25 அறிவிப்பு!

நடிகர் ராகவா லாரன்ஸின் 25-வது படத்தின் அறிவிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கினார்.

ராகவா லாரன்ஸ் இறுதியாக நடித்த சந்திரமுகி – 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது

இதையும் படிக்க: தூங்கு செல்லம்… சிறுவனை உற்சாகப்படுத்திய நயன்தாரா!

தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் 25-வது படத்தை ரமேஷ் வர்மா என்பவர் இயக்கவுள்ளார். இதற்கான, அறிவிப்பை நாளை (அக்.29) காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறாரா ஜோஷ் இங்லிஷ்?

சென்செக்ஸ் 603 புள்ளிகளுடனும், நிஃப்டி 158 புள்ளிகளுடன் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

அண்ணா தொடர் நடிகருடன் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!