ராகுலுக்கு எதிராக அநாகரிக பதிவு: காங்கிரஸ் போராட்டம்

ராகுலுக்கு எதிரான அநாகரிகமாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று சூரஜ்பூரின் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்தா நகர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்த சிலர், அந்த கணக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அநாகரிகமான பதிவுகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூரஜ்பூரின் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கௌதம் அவானா தலைமையில், சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

மேலும், மாவட்டத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், ராகுலுக்கு எதிராக அநாகரிகமான பதிவுகளை பதிவிட்ட வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

`பிரச்னையை முடிக்க விரும்புகிறோம்’ – அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை!

இல்லையெனில், நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சாலையில் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.

கௌதம் புத்தா நகர் மாவட்டத்தின் தகவல் துறையின் உதவி இயக்குநர் சுனில் குமார் கனௌஜியா, மாவட்டத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் கூறி, செக்டர் 20 காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையில் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மாலை ஜார்க்கண்ட் செல்கிறார் அமித் ஷா!

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்பு!

தனியார் உணவத்தில் அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் எப்படி? – துறையூரில் பரபரப்பு