ராகுல் காந்திக்கு ஜாமீன் – பாஜக தொடர்ந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!
ராகுல் காந்தி
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் பாஜக ஆட்சியை விமர்சித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், 2019-23 வரையிலான கர்நாடக பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தது என்றும், பாஜகவினர் ஊழல்வாதிகள் என்றும் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
விளம்பரம்
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கில் ஏற்கெனவே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஜாமீன் பெற்ற நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்தி பெங்களூரு வந்தார். அவரை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையும் படிங்க : புதிய அமைச்சரவையில் எந்தெந்த துறைகள்… சந்திரபாபு நாயுடு கொடுத்த லிஸ்ட் இதுதான்?
பெங்களூருவில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில், நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கினர். இதே வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று ஜூன் 1ஆம் தேதி பாஜக கர்நாடக பிரிவு கோரிக்கை விடுத்தது. ஆனால், கர்நாடகாவில் வெளியிடப்பட்ட கட்சி விளம்பரங்களில் ராகுல் காந்திக்கு தொடர்பில்லை என காங்கிரஸ் கட்சி வாதிட்டது. அன்றைய நாளில் ராகுல் காந்தி ஆஜராகாத நிலையில், இன்று (ஜூன் 7) ஆஜரானதைத் தொடர்ந்து, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
விளம்பரம்
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Bengaluru
,
Congress
,
high court
,
rahul
,
Rahul Gandhi